மூழ்கிய கப்பலிலிருந்து எண்ணெய்யை மீட்கத் தொடங்கியது பிலிப்பைன்ஸ்


பிலிப்பைன்ஸ் லிமே நகருக்கு அருகில் மூழ்சிய எண்ணெய் டேங்கரில் இருந்து கசிந்த பொிய அளவிலான எண்ணெய்யை மீட்டெடுக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது.

இந்த எண்ணெய்க்  கசிவு ஏற்கனவே மணிலா விரிகுடாவில் உள்ள மீனவர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வாரங்களுக்கு முன்பு மணிலா விரிகுடாவில் கெய்மி சூறாவளியின் போது மூழ்கிய ஒரு டேங்கரில் இருந்து 1.4 மில்லியன் லிட்டர் (370,000 கேலன்கள்) தொழில்துறை எரிபொருள் எண்ணெயை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மூழ்கிய கப்பலான MT Terranova, தலைநகர் மணிலாவிற்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிமே நகரிலிருந்து ஜூலை 25 அன்று மூழ்கியதில் இருந்து பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

நிர்ணயிக்கப்படாத அளவு அதன் சரக்கு ஏற்கனவே கடலில் கொட்டப்பட்டு, மீனவர்கள் மற்றும் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.

டெர்ரனோவா கப்பலில் இருந்த எட்டு கொல்கலன்களில் இருந்த எண்ணெய்களில் முதற்கட்ட சோதனை நீக்கம் வெற்றிகரமாக முடிந்த பின்னர், ஒரு தனியார் நிறுவனம் மற்றொரு கப்பலுக்கு மாற்றுவதாக பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை கூறியது. 

மூழ்கிய கப்பலின் ஒவ்வொரு கொல்கலனிலும் 175,000 லிட்டர் எண்ணெயை சேமிக்கப்பட்டுள்ளது.

கப்பல் வளைகுடாவின் அடிப்பகுதியில் சுமார் 34 மீட்டர் (112 அடி) மேற்பரப்பில் இருந்து கீழே உள்ளது.

டெர்ரனோவாவில் இருந்து கசிவு மற்றும் அதே நேரத்தில் விரிகுடாவில் மூழ்கிய இரண்டு கப்பல்கள், ஜூலை 28 அன்று 84 சதுர கிலோமீட்டரையும், ஜூலை 30 அன்று 27 சதுர கிலோமீட்டரையும் உள்ளடக்கியதாக கடல் பாதுகாப்பு அமைப்பான ஓசியானா தெரிவித்துள்ளது.

இந்த எண்ணெய்கசிவால் பிலிப்பைன் 1 பில்லியன் பெசோக்கள் (17.5 மில்லின் டொலர்கள்) வரையான உள்ளூர் மீனவர்களின் தொழில்துறை பாதிப்படைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments