யேர்மனி இராணுவ வான்தளத்தில் நாசவேலை: தளம் மூடப்பட்டது!!


யேர்மனி கேளின்-வான் (Cologne-Wahn ) பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் வான் தளத்தின் நீர் விநியோகத்தில் வேண்டும் என்றே மாசுபடுத்தப்பட்டதால்  அத்தளம் மூடப்பட்டுள்ளது.

கேளின்-பொன் ( Cologne-Bonn) விமான நிலையத்திற்கு அருகில் இத்தளம் அமைந்துள்ளது. இங்கே 4,300 இராணுவ வீரர்களும் 1,200 யேர்மன் குடிமக்களும் வாழுகின்றனர்.

அங்கிருக்கும் அதிகாரிகளால் குழாய் வழியாக வரும் குடிநீரைக் குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த நீர் மாசுபட்டுள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர். இராணு வான் தளத்தைச் சுற்றியுள்ள வேலியில் தேசம் விளைவிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

நீரில் மாசு எவ்வாறு வந்தது. வேலி எவ்வாறு சேதமாக்கப்பட்டது என்பது குறித்து இராணுவ காவல்துறையும், இராணுவப் புலனாய்வு அமைப்பும் குற்றத்தை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேர்மனியின் அதிபர் இந்த விமான தளத்தை வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

No comments