செங்கடலில் ஹூதியின் தாக்குதலில் எரியும் கிறீஸ் எண்ணெய்க் கப்பல்!
ஈராக்கிலிருந்து கிறீஸ் நாட்டுக்குச் செங்கடல் வழியாக பயணித்த எண்ணெய்க்கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை தீப்பிடித்தாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) தெரிவித்தது.
நேற்று முன்தினம் யேமன் ஹூதி போராளிகளின் தாக்குதலிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. Sounion எண்ணெய் கப்பல் தாக்குதலை அடுத்து அக்கப்பலில் இருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
150,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் சேதமடைந்த டேங்கர் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் செங்கடல் கடற்படை பணி ஆஸ்பைட்ஸ் தெரிவித்துள்ளது.
Post a Comment