பாகிஸ்தானில் மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 11 காவல்துறையினர் பலி!!


பாகிஸ்தானில் காவல்துறையினரின் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் பதினொரு காவல்துறையினர் கொல்லப்பட்டனர். மேலும் ஒன்பது காவல்துறையினர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.

நேற்று வியாழக்கிழமை  பாகிஸ்தானின் தெற்கு மாவட்டமான ரஹீம் யார் கானில் கொள்ளையர்களைத் தேடிக் காவல்துறையினர் ரோந்து சென்றபோதே இத்தாக்குதல் நத்தப்பட்டது.

தாக்குதல் நடத்தியவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என காவல்துறையினர் நம்புகின்றனர்.

கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் இறுதிச்சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

பஞ்சாபில் நெடுஞ்சாலைகளில் பயணிகளை கொள்ளையர்கள் அடிக்கடி கொள்ளையடிப்பார்கள், அதனால்தான் மக்கள் பொதுவாக சிந்து நதியை ஒட்டிய நோ-கோ பகுதிகளில் செல்வதைத் தவிர்க்கிறார்கள்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

No comments