பொதுவேட்பாளர் கட்டுப்பணம்:சுமா ,சாணக்கியன் 60கோடி!



ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள பா.அரியநேத்திரன் இன்றைய தினம் திங்கட்கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் சார்பில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியக் குழு உறுப்பினர் த.சிற்பரன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிடம் 60கோடி நிதி பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இரா.சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் இருவரும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கினை தனித்து சந்தித்துள்ளனர்.

சீனத் தூதுவருடன் காத்திரமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாகக் எம்.ஏ.சுமந்திரன் பின்னர் தகவல் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களது கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பாகவும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகச் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சீன அரசின் நிலைப்பாட்டை கண்டறியவே தனிப்பட்ட ரீதியிலான சந்திப்பு முன்னெடுக்கப்பட்டதாக தமிழரசுக்கட்சி உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.  


No comments