சட்டிசுட்டதடா! கைவிட்டதடா!!



தமிழ் பொதுவேட்பாளரிற்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ள நிலையில்  தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் தமிழ் பங்காளிக்கட்சிகள் பங்கெடுத்துள்ளதாக தெரியவருகின்றது

ஜனாதிபதியுடனான சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் ரெலோவின் சுரேன் குருசாமி, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் துளசி, வேந்தன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே ரணில் ஆதரவு தரப்புக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்ற மதுபானச்சாலைகள் உள்ளிட்டவை தொடர்பில் அம்பலப்படுத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பில் பொது அமைப்புக்களை கைவிட்டு ரணில் விசுவாசிகள் பங்கெடுத்துள்ளனர்.


No comments