யேர்மனி சோலிங்கன் நகரில் கத்திக்குத்து: மூவர் பலி!


ஈழத் தமிழர்கள் கணிசமான அளவு வாழும் மேற்கு யேர்மனியின் சோலிங்கன் நகரில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர் . சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சோலிங்கன் நகரின் 650 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் ஒரு திருவிழாவில் ஒருவர் வழிப்போக்கர்களை கத்தியால் குத்தினார்.

உள்ளூர் செய்தித்தாள் Solinger Tageblatt  மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டது.

ஒன்பது பேரின் உயிரைக் காப்பாற்ற துணை மருத்துவர்கள் போராடி வருவதாக விழா இணை அமைப்பாளர்களில் ஒருவரான பிலிப் முல்லர் கூறினார்.

இந்த தாக்குதலை அடுத்து, சோலிங்கன் நகரம் தனது 650வது ஆண்டு விழாவை முற்றிலுமாக இரத்து செய்துள்ளது. 

இன்று சனிக்கிழமையும் நாளை  ஞாயிற்றுக்கிழமையும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சோளிங்கர் நகரம் சனிக்கிழமை இரவு அறிவித்தது.


No comments