சிறைப்பிடிக்கப்பட்டாரா கனியவள அதிகாரி!



பூநகரி கௌதாரிமுனை-பரமன்கிராய் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய மணல் கொள்ளை தொடர்பில் ஆய்வு நடத்த சென்றிருந்த கனியவளத்திணைக்கள அதிகாரியொருவர் மணல் கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டள்ளார்.பின்னதாக அவர் காவல்துறையால் மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.

கௌதாரிமுனை –பரமன்கிராய் பகுதிகளில் கனியவளத்திணைக்கள யாழ்.அலுவலக பணிப்பாளரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் மூன்று மாத திருட்டு மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஆராய தலைமையகத்திலிருந்து விடுக்கப்பட்ட பணிப்பினையடுத்து வேறொரு மாவட்ட பணிப்பாளர் கள ஆய்வுக்காக வந்துள்ளார்.

இந்நிலையில் மணல் கொள்ளையர்கள் அவரை மணல் அகழும் பகுதிக்குள் செல்ல அனுமதி மறுத்ததுடன் அவரை சிறைப்பிடித்துள்ளனர்.

இதனிடையே ஒட்டுமொத்த மக்கள் போராட்ட குழு அழைப்பின் பேரில் எதிர்வரும் 9ம் திகதியினுள் புதிதாக மணல் அகழ வழங்கப்பட்ட பெமிட் அனுமதிகள் இரத்துச்செய்யப்படாவிட்டால் கிளிநொச்சி மாவட்டம் தழுவிய போராட்ட நடவடிக்கைகளிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனிய வளத்திணைக்கள யாழ்.அலுவலகப்பணிப்பாளர்; உடனடியாக இடமாற்றம் செய்யப்படாதவிடத்து மாவட்ட செயலகம் மற்றும் பூநகரி பிரதேசசெயலக அலுவலக முற்றுகைப்போராட்டத்தை முன்னெடுப்போம்.அவரது யாழ்ப்பாணத்திலுள்ள ஆடம்பர பங்களா முன்னதாகவும் முற்றுகை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அவசர கூட்டம் மாவட்ட பதில் செயலர் தலைமையில் கூட்டப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. 

குறித்த பணிப்பாளர்; தற்போது கிழக்கில் கைதான மண் மாபியா குழுக்களது நண்பராகவுள்ளதுடன் தற்போது வடக்கிற்கு இடமாற்றம் பெற்றுள்ளார். கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் மணல் வியாபாரத்தின் பங்காளியாகவுள்ளதுடன் தானே தனது பணியாளர்கள் சகிதம் மணல் முகவர்களை வைத்து வியாபாரத்தை முன்னெடுத்துள்ளார்.கிழக்கில் நடந்தேறிய மணல் மோசடிகளை கௌரவ ஆளுநர் நேரடியாக அறிந்துள்ளார் என்பதை போராட்டகுழு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments