250 ஏவுகணைகளை தென்கொரிய எல்லைக்கு நகர்த்தியது வடகொரியா


250 அணுசக்தி திறன்கொண்ட ஏவுகணைகளை வடகொரிய அதிபர்  கிம் ஜாங் உன் அந்நாட்டு இராணுவத்திற்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துள்ளார்.

இச்செய்தியை வடகொரியாவின் உத்தியோகபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

தந்திரோபாய தாக்குதல்களை நடத்தும் ஏவுகணைகள் தானே வடிவமைத்ததாக கிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆற்றி உரையில் தெரிவித்தார்.

நிகழ்வில் பெருந்திரளான ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஏவுதளத்துடன் பொருத்தப்பட்ட வானகங்களை அவர் இராணுவத்திடம் கையளிக்க காட்சிப்படுத்தப்பட்டது.  இதில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்

கலந்து கொண்டனர். வான வேடிக்கை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணிகளை அணுசக்தி அடிப்படையிலான இராணுவ முகாம்களாக மாற்றுவதன் காரணமாக குறிப்பிடத்தக்க மற்றும் மூலோபாய மாற்றத்திற்கு பதிலளிக்கும் வகையில் வட கொரியா தனது தடுப்பு திறன்களை மேம்படுத்த வேண்டும்" என்று கிம் கூறுகிறார்.

தென் கொரியாவில் ஏவுகணை பாதுகாப்புகளை முறியடிக்க வடிவமைக்கப்பட்ட மொபைல் குறுகிய தூர ஆயுதங்களின் ஆயுதக் களஞ்சியத்தை வட கொரியா விரிவுபடுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக, பியோங்யாங் அமெரிக்க நிலப்பரப்பை அடைய வடிவமைக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் உருவாக்கி வருகிறது.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட ஏவுகணைகள் தென்கொரிய எல்லையில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதானால் வடகொரியாவின் பங்குச் சந்தை இல்லாதளவு சரிவுக்குச் சென்றுள்ளது.


No comments