பிரித்தானியாவில் மாற்றம் தொடங்கியது: பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றி!!


பிரித்தானியாவில் நேற்று வியாழக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. 610 இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி சார்பாகப்போட்டியிட்டனர். தற்போது இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவை தங்களுடைய முக்கிய கவலைகள் எதிர்கொண்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 

தொழிற்கட்சி பெரும்பாண்மைக்கு 326 இடங்கள் தேவை என்ற நிலையில் அவர்கள் 411 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் அவர்கள் ஆட்சி அமைக்கின்றனர்.

தொழிற்கட்சியின் தலைவர்  சர் கெய்ர் ஸ்டார்மர் பிரதமராகப் பதவியேற்கிறார்.

ஆளும் கட்சியான கொன்சர்வேடிவ் கட்சி (பழமைவாதி) 120 இடங்களில் வெற்றிபெற்று படுதோல்வியடைந்துள்ளனர். கொன்சர்வேடிவ் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

லிபரல் டெமோகிரட் 71 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஸ்கொட்டிஸ் நைசனல் பார்ட்டி 9 இடங்களில் வெற்றிபெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

சின்பெய்ன் 7 இடங்களில்  வெற்றிபெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இன்டிபென்டன் 5 இடங்களில் வெற்றிபெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.

ரீபோர்ம் யூகே 4 இடங்களில் பெற்றிபெற்றது ஏழாவது இடத்தில் உள்ளது.

கிறீன் 4 இடங்களில் வெற்றிபெற்ற எட்டாவது இடத்தில் உள்ளது.

தேர்தல் முடிவுகளைக் கீழே பார்வையிடலாம்


No comments