தொழிற்கட்சி 410 ஆசனங்களைப் பெறும்: கன்சர்வேடிவ் 131 ஆசனங்களுடன் படுதோல்வியடையும்!!
பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி பெரும்பாண்மைக்கு மேலதிகமாக 170 ஆசனங்களை எடுத்து மொத்தமாக 410 ஆசனங்களைக் கைப்பற்றும் என தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவை தங்களுடைய முக்கிய கவலைகள் எதிர்கொண்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் தொழிற்கட்சி 410 ஆசனங்களைகளை கைப்பற்றி அதன் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக வருவார் என கணிக்கப்பட்டுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சியினர் 131 ஆசனங்களுடன் படுதோல்வியடைவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தாராளவாத ஜனநாயகக் கட்சி 61 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி அதன் எம்.பி.க்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.
சீர்திருத்த யூகே கட்சி 13 ஆசனங்களைப் பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்சி நான்காவது பெரிய சக்தியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பசுமைக் கட்சி நான்க ஆசனங்களைப் பெறும் கணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு 19 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Post a Comment