திருமண நிகழ்வில் தாக்குதல்: 40 பேர் பலி!
ஆபிரிக்கா நாடான மாலியில் மத்திய பகுதியில் அமைந்துள்ள டிஜிகுபோம்போ கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் புகுந்த ஆயுதம் ஏந்திய குழு தாக்குதலை நடத்தியது. இதில் 40 பேர் கொல்லப்பட்டனர்
கடந்த திங்கட்கிழமை மாலை உந்துருளிகளில் வந்த ஆயுததரிகள் திருமண விழாவில் துப்பாக்கித் தாக்குதலைகள் நடத்தினர். அத்துடன் கொல்லப்பட்டவர்களில் பெருமாலும் கழுத்து அறுக்கப்பட்டது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனையவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்
தாக்குதல்களானது 3 மணி நேரம் நீடித்தது. தாக்குதலாளிகள் மக்களின் வீடுகளை சூறையாடினர். சுகாதார மையத்திற்கு தீ வைத்துள்ளனர். கால்நடைகளை மற்றும் பொருட்களைத் திருடியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எவ்வாறாயினும், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய JNIM தீவிரவாதக் குழுவின் முந்தைய தாக்குதல்களுடன் இது ஒற்றுமையைக் கொண்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
Post a Comment