உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல்: குழந்தைகள் உட்பட 37 பேர் பலி! !


உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட உக்ரைனிய ஐந்து நகரங்கள் மீது நேற்று திங்கட்கிழமை ரஷ்யா சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தது.

கீவில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ஒரு ஏவுகணை தாக்கியது. இதில் 3 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 170க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு உக்ரைனுக்கு ஆரவு வழங்கும் நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர். அத்தும் இது போர் குற்ற விசாரணை தேவை என வலியுறுத்தினர்.

உக்ரைனில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பு பணிக்குழு, கிய்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக ஆரம்ப காட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

எவ்வாறாயினும், ரஷ்யா Kh-101 காலிபர் ஏவுகணை மூலம் மருத்துவமனையைத் தாக்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலை ரஷ்யா பொறுப்பேற்க மறுத்தது.  இது அமெரிக்காவால் உக்ரைனுக்கு கொடுக்கப்பட்ட வான்பாதுகாப்பு ஏவுகணையே மருத்துவமனை மீது விழுந்து வெடித்ததாக ரஷ்யா காணொளிக் காட்சிகளைக் காட்டி இச்செய்திளை மறுத்துள்ளது.

No comments