ஒலிப்பி பாதுகாப்பு: பயிற்சிகளில் பிரஞ்சுப் படைகள்!


பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டுப் பயங்கரவாத அச்சுறுத்தல் உட்பட பாதுகாப்பு நடைவடிக்கைகளுக்காக காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக 18 ஆயிரம் பிரஞ்சு இராணுவத்தினர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாரிசில் ஒரு பெரிய முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒலிம்பிக்கைப் பாதுகாப்பதற்காக உள்துறை பாதுகாப்புப் படைகளான காவல்துறையினர், ஜெண்டர்ம்கள், தீயணைப்பு வீரர்கள், அனைவரும் முன்னணியில் உள்ளனர்.

பைகளில் குத்துதல், தடியடி, உதைத்தல், கைமுட்டி தள்ளுதல் போலித் துப்பாக்கியைப் பயன்படுத்தி தாக்கும் பயிற்சிகள் என அனைத்து பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை, 2024 ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு, பாரிஸில் ரோந்து சென்ற பிரெஞ்சு ராணுவ வீரரை ஒருவர் கத்தியால் குத்தி காயப்படுத்தினார்.

கிழக்கு பாரிஸில் உள்ள Gare de l'Est ரயில் நிலையத்திற்கு வெளியே இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments