மதுராவின் வெற்றி: வாக்குகள் திருடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!


வெனிசுலாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் திணைக்களம் அறித்த பின்னர் அந்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன.

நேற்றுத் திங்கட்கிழமை மதுரோ தனது "சவிஸ்டா" இயக்கத்தின் கால் நூற்றாண்டு ஆட்சியை நீட்டிக்க 51% வாக்குகளுடன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதாக தேர்தல் திணைக்களம் அறிவித்ததைத் தொடர்ந்து எதிர்ப்புகள் தொடங்கின. எதிர்க்கட்சிகள் வாக்குகள் திருடப்பட்டன. மாற்றியமைக்கப்பட்டன என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

கராகஸில் உள்ள மிராஃப்லோர்ஸ் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் பெருகியதால் சிலர் சாலைகளைத் தடுத்தனர், தீ மூட்டினார்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை போலீசார் மீது வீசினர்.

கராகஸ் மற்றும் மரகே நகரத்தில் கேடயங்கள் மற்றும் தடியடிகளுடன் போலீசார் சில போராட்டங்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

அமெரிக்க வெனிசுலாவில் எண்ணை வளத்தை குறித்வைத்து அதன் புலானய்வு அமைப்பான சி.ஜ.ஏ வைத்து ஆட்சி மாற்றம் மாற்றம் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு நிதிகளை வழங்கி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழி தேடுதவது. உட்நாட்டில் கலவரங்களை ஏற்படுத்த அயுதப் பயிற்சிகளை வழங்கி அனுப்பியது என பல்வேறு குளறுபடிகளைச் செய்து வருகிறது.

இத்தேர்தல் முடிவுகளை நம்பமுடியாது என அமெரிக்கா தெரிவித்தது.

ரஷ்யா, சீனா மற்றும் இடதுசாரி தலைமையிலான லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட நட்பு நாடுகள் மதுரோவை ஆதரித்தன.

தேசிய இறையாண்மை, தேசிய கண்ணியம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான வெனிசுலாவின் முயற்சிகளுக்கு சீனா எப்போதும் உறுதியாக ஆதரவளிக்கும், மேலும் வெளித் தலையீட்டை எதிர்க்கும் வெனிசுலாவின் நியாயமான காரணத்தை உறுதியாக ஆதரிக்கும்" என்று அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


No comments