60 ஆயிரம் இராணுவம் காயம்



இலங்கையில் போரில் காயமடைந்த 60,000 வீரர்களில் சுமார் 10,000 போர்வீரர்கள் படுக்கையில் அல்லது சக்கர நாற்காலிகளில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ மறுவாழ்வு வழங்கவும், வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அளிக்கும் வகையிலும் அத்திடிய, அனுராதபுரம், கம்புருப்பிட்டிய மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் நிவாரண நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 

மேலும், நாட்டுக்காகப் போராடி மருத்துவக் காரணங்களால் ஓய்வு பெற்றிருக்கும் போது, 55 வயது நிறைவடையும் முன் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தங்கி வாழ்வோர்களுக்கு, அவர்கள் உயிருடன் இருந்தபோது பெற்று வந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் நிலையான மாதாந்திர கொடுப்பனவாக வழங்கப்படும். அதன்படி போரின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நீதி கிடைத்துள்ளது என்பதையும் கூற வேண்டும்.

 

22 வருட சேவையை முடித்து ஓய்வு பெறும் 3000 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், மீண்டும் தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. செங்கடலில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 550 கடல்சார் பாதுகாவலர்களை அனுப்ப வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருவதாக அரசு அறிவித்துள்ளது.

No comments