கார் வெடிகுண்டு வெடிப்பு: ரஷ்ய இராணுவ உளவுத்துறை அதிகாரி காயமடைந்தார்!!
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடக்கே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் மூத்த இராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் ஈடுபட்ட சந்தேக நபர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத சாதனம் வெடித்ததால் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் காயமடைந்ததாகவும், கிரிமினல் வழக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருவரும் காரில் எறிய சிறிது நேரத்தில் வெடிப்பு ஏற்பட்டது. காயமடைந்தவர் ரஷ்ய இராணுவ உளவுத்துறை அதிகாரி எனக் கூறப்படுகிறது.
காரின் உரிமையாளர் ஒரு கேணல் தர அதிகாரி என்றும் பொதுப் பணியாளர்களின் பிரிவுகளில் ஒன்றின் தலைவர் என்று பெயரிடப்படாத ஆதாரத்தை மேற்கோள் காட்டி Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் இராணுவத்தில் செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கு பொறுப்பானவர் மற்றும் உக்ரைனுக்கு எதிரான போரில் பணியாற்றினார் என்று அந்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
சந்தேக நபர் துருக்கிக்கு தப்பிச் சென்று விட்டதாகவும் அவரை நாடு கடத்துமாறு ரஷ்யாவின் புலனாய்வு அமைப்பான ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் துருக்கியிடம் கோரிக்கை விடுத்தது.
இதேநேரம் தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் ஒரு ரஷ்ய குடிமகன் மாஸ்கோவிலிருந்து விமானத்தில் வந்த பிறகு போட்ரமில் கைது செய்யப்பட்டார் என துருக்கிய உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Post a Comment