படகு கவிழ்ந்ததில் 25 அகதிகள் பலி! 190 பேரைக் காணவில்லை!!
வடமேற்கு ஆபிரிக்க நாடான மொரிட்டானியா கடற்பரப்பில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 25 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் 190 பேரைக் காணவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 103 பேர் மொரிட்டானிய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்தது. படகில் 300 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களில், 10 பேர் அவசரமாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இப்படகில் இருந்தவர்கள் பெரும்பாலம் செனகல் மற்றும் காம்பியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
காம்பியாவில் சுமார் 300 பேர் மரத்தாலான பைரோக் படகில் ஏறியதாகவும், ஜூலை 22 அன்று படகு கவிழ்வதற்கு முன்பு ஏழு நாட்கள் கடலில் படகு பயணித்ததாகவும் கூறப்படுகிறது.
Post a Comment