ட்ரோன் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார் சூடான் இராணுவத் தளபதி!!


சூடானின் இராணுவத்தின் உயர்மட்டத் தளபதியான ஜெனரல் அப்தெல்-ஃபத்தாஹ் புர்ஹான், அவர் கலந்துகொண்டிருந்த ஒரு இராணுவ விழாவின் மீது ஆளில்லா விமானத் தாக்குதலில் இருந்து காயமின்றி உயிர்தப்பி வெளியேறினார் என்று செய்தித் தொடர்பாளர் இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.

கிழக்கு சூடானில் உள்ள Gebeit நகரில் 5 பேர் கொல்லப்பட்ட தாக்குதலில் பர்ஹான் உயிர் தப்பியதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ஹசன் இப்ராகிம் தெரிவித்தார்.

சூடான் ஒரு வருடத்திற்கும் மேலாக உள்நாட்டு மோதலில் ஈடுபட்டு வருகிறது.  இராணுவம் விரைவு ஆதரவுப் படைகள் (RSF) எனப்படும் சக்திவாய்ந்த துணை இராணுவக் குழுவை எதிர்த்துப் அந்நாட்டு இராணுவம் போராடுகிறது. 

ஆனால் புர்ஹானுக்கும் RSF தலைவர் முகமது ஹம்தான் டகாலோவுக்கும் இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக பிரிந்தது உள்நாட்டு யுத்தம் நடைபெறுகிறது.

மோதலின் விளைவாக மில்லியன் கணக்கான சூடான் பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் கார்ட்டூமைத் தாக்கும் கடுமையான சண்டையால், இராணுவம் பெரும்பாலும் நாட்டின் கிழக்கில் உள்ள செங்கடல் தளத்திலிருந்து இயங்குகிறது.

அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தில் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் நிலையில் இந்த படுகொலை முயற்சி நடந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவால் நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தை சூடானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.

No comments