சம்பந்தனின் உடல் தீயுடன் சங்கமமானது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இராஜவரோதயம் சம்பந்தனின் ஆசைகள் பிரகாரம் தென்னிலங்கை முக்கிய புள்ளிகள் மற்றும் இந்திய பிரதிநிதிகள் சகிதம் இறுதிக்கிரியைகள் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துக்கொண்டிருந்தனர்
இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் சம்பந்தனின் இறுதி கிரியைக்காக் ரணில் விக்ரமசிங்க,பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்த நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை இடம்பெற்று தீயுடன் சங்கமாகியுள்ளது.
முப்படைகளின் உயரதிகாரிகள், என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
இதனிடையே திருகோணமலை நகர் முழுதும் ஆழ்ந்தல் இரங்கல் தெரிவித்து இரா. சம்மந்தனின் உருவப்படம் பொறித்து தொங்கவிடப்பட்டிருந்த போதும் பொதுமக்களது பிரசன்னம் மிக குறைவாகவே காணப்பட்டது.
Post a Comment