கைதாவாரா? வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா!



சர்ச்சைக்குரிய சாவகச்சேரி வைத்தியசாலை அத்தியட்சகர் இடமாற்ற கடிதத்துடன் இன்றிரவு 7.00 மணிக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேரில் கையளிக்க முற்பட்டுள்ள நிலையில் அதனை ஏற்க வைத்தியர் மறுதலித்துள்ளார். இரவு 7.00மணி அலுவலக நேரம் அல்ல என வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஏற்க மறுத்துள்ளார்.

இந்நிலையில் அரச கட்டடமொன்றினுள் அடாத்தாக தங்கியிருந்துவருகின்ற வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவின் தூண்டுதலின் பேரில் நாளை நடக்கவுள்ள கடையடைப்பின் பின்னரே தனது சேவை நிலையத்திலிருந்து வெளியேற அவர் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


No comments