அரச அலுவலகங்கள் முடங்கின:நாளை பாடசாலைகளும்!
அனைத்து அரச ஊழியர் தொழிற்சங்கங்களது போராட்டத்தினால் இன்று முழுவதுமாக அரச அலுவலகங்களும் முடங்கிப்போயின.
இந்நிலையில்; பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வழமை போன்று பாடசாலைகள் யாவும் நாளை செவ்வாய்கிழமை இயங்கும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நாளை (09) செவ்வாய்க்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். இந்நிலையிலேயே, கல்வியமைச்சு பாடசாலைகள் வழமை போன்று நடைபெறு அறிவித்துள்ளது.
இதனிடையே இன்றும் நாளையும் நடைபெறும் தொழிற்சங்க போராட்டத்துக்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பும் ஆதரவு தெரிவுத்துள்ளது.அத்துடன் இரண்டு நாட்களும் பாடசாலைகள் செயலிழப்பதைத் தவிர்க்கும் முகமாக, 9 ம் திகதியான நாளை செவ்வாய்க்கிழமை - அனைத்து அரச ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் போராட்டத்துடன் இணைந்து - அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் கோரிக்கைகளையும் முன்வைத்து சுகயீன லீவை அறிவித்து அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
அன்றைய தினமான நாளை செவ்வாய்கிழமை அதிபர், ஆசிரியர்கள் கடமைக்கு செல்லமாட்டார்கள் என்பதுடன் பெற்றோர்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரச அலுவலகங்கள் நாடளாவிய ரீதியில் நாளையும் முடங்கவுள்ள நிலையில் பாடசாலைகளும் நாளையும் முடங்கவுள்ளது.
Post a Comment