புதையல் தேடல் ஓய்ந்தபாடாகவில்லை!
யுத்தம் முடிவுற்றதாக இலங்கை அரசு அறிவித்து 15வருடங்கள் கடந்துள்ள போதும் புலிகளது புதையலை தேடும் பயணம் ஒய்ந்தபாடாகவில்லை.
இந்நிலையில் மீண்டும் விடுதலைப் புலிகளால் யுத்த காலத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் - தங்கம் ஆகியவற்றைக் கண்டறியும் விசேட ஸ்கேனர் இயந்திரத்தைப் பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் உட்பட மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் யாழ்.பிராந்திய பிரிவினர் மன்னார் இராணுவ கட்டளைத் தளபதி பரிந்துரைக்கமைய, மன்னார் தல்பாடு வீதி, தாராபுரம் பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் அவர்கள் கைது செய்யப்படுள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான இராணுவ சிப்பாய் மற்றும் வவுனியா, அனுராதபுரம் மற்றும் கடுவெல பகுதிகளில் வசிக்கும் 29 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று பேர் மடிக்கணினியயுடன் கைது செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் உயிருடன் உள்ளனரா இல்லையாவென்ற கேள்விகள் மத்தியில் புதையல் தேடும் நடவடிக்கை மட்டும் ஓய்ந்தபாடாகவில்லை.
Post a Comment