ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்


ஹமாஸ் குழுவின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழிப் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இவர் ஈரானின் புதிய அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் ஹனியே ஈரான் சென்றார். பின்னர் அவர் அங்குள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் அவர் இருந்த வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர் தங்கியிருந்த வீட்டின் மீது ரொக்கெட் தாக்கியதில் அவரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்மாயில் ஹனியே சியோனிஸ்ட் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று ஹமாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இஸ்மாயில் ஹனியே ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து வந்தார்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியது.

இந்த தாக்குதலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஈரான் உறுதியளித்துள்ளது.

பாலஸ்தீன நிர்வாகம், துருக்கி, ரஷ்யா, கத்தார் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி  கமேனி சபதம் செய்தார்.

ஹனியே உட்பட ஹமாஸின் பெரும்பாலான அரசியல் தலைமைகள் கத்தாரில் நாடுகடத்தப்பட்டு வாழ்கின்றனர்.

தலைவரின் மறைவுக்குப் பிறகு ஹமாஸுக்கு லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் இரங்கல் தெரிவித்தது.

இதேபோலவே ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு யேமனில் இயங்கும் ஹூதி போராளிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


No comments