சீனாவுடன் போரை விரும்பவில்லை என்கிறது பிலிப்பைன்ஸ்


தென்சீனக்கடல் விவகாரம் சீனாவுடன் பிலிப்பைன்ஸ் போரைத் தொடங்காது என பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தென் சீனக் கடலில் நிலைகொண்டுள்ள பிலிப்பைன் படைகளுடன்  பேசும்போது மார்கோஸ் இக்கருத்தைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

எங்கள் தேசத்தை பாதுகாப்பதில் நாங்கள் உண்மையாக இருக்கிறறோம். தென்சீனக்கடலில் ஏற்படும் பிரச்சினைகளை நாங்கள் அமையான முறையில் தீர்க்க விரும்புகிறோம்.

சீனக் கடற்படைகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் மிகப் பெரிய கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்ததற்காக பிலிப்பைன்ஸ் படைகளை மார்கோஸ் பாராட்டினார். 

பிலிப்பைன் எந்த வெளிநாட்டு சக்திகளுக்கும் அடிபணியாது என்று குறிப்பிட்டார்.

நாங்கள் பலத்தை அல்லது மிரட்டலைப் பயன்படுத்த மாட்டோம். வேண்டுமென்றே யாருக்கும் காயம் அல்லது தீங்கு விளைவிக்க மாட்டோம் என்று மார்கோஸ் கூறினார். 

நாங்கள் அமைதியான முறையில் பிரச்சினைகளை தீர்க்க உறுதியாக நிற்கிறோம். எங்கள் அமைதிக்கான அமைதியான மனப்பான்மை எவரும் தவறாகக் கருதப்படக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.

No comments