நியூ கலிடோனியாவின் சுதந்திரத்திற்காகப் போராடும் தலைவர் பிரான்ஸ் சிறையில் அடைக்கப்படுகிறார்!!
பிரான்சின் காலனித்துவப் பகுதியாக இன்றும் இருக்கும் பசிபிக் பிராந்தியத்தின் தீவான நியூ கலிடோனியாவின் சுதந்திரத்திற்குப் போராடும் அமைப்பான சிசிஏரியின் தலைவர் கிறிஸ்டியன் டீனை கைது செய்யப்படுவார் என அவரது சட்டவாளர்கள் அறிவித்தனர். இவர் கிழக்கு பிரான்சில் உள்ள மல்ஹவுஸ் நகருக்கு அனுப்பப்படுவார்.
நியூ கலிடோனியா பகுதியில் கடந்த மாதம் அரசாங்கத்திற்கு எதிராக கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களுடன் இவர் இருப்பவதாக் கூறி அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நேற்று சனிக்கிழமையன்று நியூ கலிடோனியாவின் தலைநகரான நௌமியாவில் விசாரணை அரச சட்டவாளர்களால் டீன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் கொலை அல்லது கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டது.
இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட ஒன்பது பேரைக் கொன்ற வன்முறை தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்ள டீன் உட்டப அவரது குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது கடந்த புதன்கிழமை செய்யப்பட்டனர்.
இவர்களில் நால்வர் பெயர் குறிப்பிடாமல் பிரான்சில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக் குழுவின் தலைவர் டீன், குழுவின் தகவல் தொடர்பு இயக்குனர் பிரெண்டா வனாபோ உட்பட மேலும் மூன்று ஆர்வலர்கள் பிரான்சுக்கு கிட்டத்தட்ட 17,000 கிலோமீட்டர்கள் கடந்து இருக்கும் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
Post a Comment