ஈக்வடோரில் நிலச்சரிவு: 6 பேர் பலி! 19 பேர் காயம்!
ஈக்வடோர் நாட்டின் நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கனமழை காரணமாக பெருக்கெடுத்த ஆறுகள் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 19 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய நகரமான பானோஸ் டி அகுவா சாண்டாவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக ஈக்வடார் இடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது. மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
மண் மூன்று மகிழுந்துகள், இரண்டு வீடுகள் மற்றும் பேருந்து மீதும் சரிந்து விழுந்தது என்று தீயணைப்புதுறை தெரிவித்தது.
Post a Comment