சீனாவுக்கு இனி இடமில்லை:டக்ளஸ்!
தற்போதைய ஆட்சியில் சீனக் கடலட்டைப் பண்ணைகளுக்கு யாழில் இடமில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேவேளை கடலட்டை குஞ்சு உற்பத்திக்காக அனுமதிக்கப்பட்ட சீன நிறுவனமும், தற்போதை தமது ஆட்சி காலத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கின்ற வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் சீனர்கள் கடலட்டை பண்ணை தொழிலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, தற்போது கடலட்டை தொடர்பான தொழிலில் ஈடுபடுவதற்கு யாழ் மாவட்டத்தில் சீனர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்த நல்லாட்சியில் கடலட்டை குஞ்சு உற்பத்திக்காக அனுமதிக்கப்பட்ட சீன நிறுவனமும், தற்போதை தமது ஆட்சி காலத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேசேகர தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அதில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றுள்ளது.
Post a Comment