இங்கிலாந்து சிறையிலிருந்து ஜூலியன் அசாஞ்சே விடுதலை!!
இங்கிலாந்து சிறையிலிருந்து விக்கி லீக்ஸ் ஊடகத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இன்று விடுதலை செய்யப்பட்டார்.
அமெரிக்க இராணுவ இரகசிய ஆவணங்களை விக்கி லீக்சில் வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொள்வதாக ஜூலியன் அசாஞ்சே தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்காவில் முன்னிலையாகவும் ஒப்புக்கொண்டார். அசாஞ்சே அமெரிக்காவின் மெரினா தீவில் உள்ள கோர்ட்டில் முன்னிலையாகவுள்ளார்.
இந்த குற்றத்திற்கு 62 மாதங்கள் (1,860 நாட்கள்) சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால், அசாஞ்சே ஏற்கனவே 1,901 நாட்கள் இங்கிலாந்து சிறையில் இருந்துள்ளார். இதனால், இராணுவ இரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் அதற்கான தண்டனையை ஏற்கனவே இங்கிலாந்து சிறையில் அனுபவித்ததால் விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நீதித்துறை சம்மதம் தெரிவித்ததையடுத்து இங்கிலாந்து சிறையில் இருந்து அசாஞ்சே இன்று விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, இங்கிலாந்தில் இருந்து அசாஞ்சே விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவர் நாளை அமெரிக்காவின் மெரினா தீவில் உள்ள கோர்ட்டில் ஆஜராக உள்ளார். இவர் பயணித்த விமானம் தாய்லாந்தில் தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து விமானம் அமொிக்காவின் மொினா தீவைச் சென்றடையவுள்ளது.
இங்கிலாந்தில் சிறை தண்டனை அனுபவித்ததையடுத்து ஒப்பந்தப்படி அவரை அமெரிக்க கோர்ட்டு வழக்கில் இருந்து விடுதலை செய்ய உள்ளது. இதனை தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சே தனது சொந்த நாடான ஆஸ்திரேலியா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment