பிள்ளையானை விடத்தயாரில்லை!



முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தமை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து முறையான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் காவலில் இருந்தபோது 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்ததாக ஆனந்த விஜேபால நாடாளுமன்றிலும் தெரிவித்துள்ளார்.

ஊயிர்த்த ஞயாறு தாக்குதல்கள் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே தாக்குதல்கள் நடப்பதற்கு முன்பே அவர் அதைப் பற்றி அறிந்திருந்தார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கோத்தபாய ராஜபக்சவை கைவிட்டு பிள்ளையான் கருணா போன்றவர்கள் மீது ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுக்களை சுமத்த முற்படுவதாக தமிழ் தரப்புக்கள் விமர்சனங்களை முன்வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.


No comments