தமிழர் தரகரானார் (தலைவரல்ல!) சுமா!



தமிழர் வாக்குகளிற்காக தென்னிலங்கை கட்சிகள் வடக்கிற்கு படையெடுத்துள்ள நிலையில் தமிழ் மக்களின் தரகராக எம்.ஏ.சுமந்திரன் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் தேசிய இனப் பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அதுவரையில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் முழு நடைமுறையாக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும்.அதுவே எமது நிலைப்பாடு என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணத்தில்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளை தேசிய மக்கள் சக்தி குழுவினர் சந்தித்திருந்தனர்.

அதேவேளை அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்களிற்கு பதிலளித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் "மாகாண சபை முறைமை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை 2019 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே தாங்கள் இடம்பெறச் செய்துள்ளதாக அனுரகுமார தெரிவித்துள்ளார்.


தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தம் தீர்வாகாது என்று தமிழர் தரப்பு கூறுவதைப் போலவே, அது தீர்வு அல்ல என்பதை அவர்கள்  ஏற்றுக்கொண்டுள்ளனர்.அத்துடன் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு புதிய அரசமைப்பு மூலமே எட்டப்பட வேண்டும் .அதுவரையில் மாகாண சபை முறைமை நீடிக்க வேண்டும். தாமதிக்காமல் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். 13 ஆம் திருத்தம் மூலம் அரசமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தாமும் வலியுறுத்தியமாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments