கடலட்டை பண்ணைகள் கூட்டமைப்பினதே:ஈபிடிபி
வடபகுதியில் கடலட்டை பண்ணைகளின் வருகையினால் பாரம்பரிய மீன்பிடி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதனிடையே சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் வடக்கில் எங்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் காண்பிக்க முடியுமா என சவால் விடுத்துள்ளது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் பேச்சாளர் சுவிர்சலாந்தில் நடைபெற்ற தமிழர் பொருளாதார மாநாடொன்றில் சீன நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற கடலட்டைப் பண்ணைகள் புதிய தாக்கங்களை உருவாக்கியுள்ளன. அது கடற்றொழிலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக வடக்கு மீனவர்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கியுள்ளனர் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் வடக்கிலும் மத்தியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரம் இருந்த காலப் பகுதியிலேயே யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சீன நாட்டின் நிறுவனத்திற்கு கடலட்டை குஞ்சுகள் உற்பத்தி செய்வதற்கான கடலட்டைப் பண்ணையை வழங்கியிருந்தார்கள்.
பின்னர் கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதன் பின்னர் சீன கடலட்டைப் பண்ணை மூடப்பட்டது. அவ்வாறிருக்கின்றபோது சிவஞானம் சிறீதரன் எவ்வித அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை புலம்பெயர் தேசங்களில் முன்வைப்பதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
Post a Comment