சாதனை தமிழகம்!
இந்தியாவின் தமிழ்நாடு- கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது. இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மெத்தனால் கலந்த சாராயத்தை அவர்கள் பருகியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றெச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 150க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து ஒவ்வொருவராக இறந்து வருகின்றனர். நேற்று இரவு வரை மொத்தம் 52 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் தான் இன்று (22) அதிகாலையில் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கள்ளச்சாரயம் அருந்தியவர்களை கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறையினர் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலம் மெத்தனால் கடத்தி கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது. முதலில் சென்னைக்கு மெத்தனால் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்படு பின்னர் வட மாவட்டங்களுக்கு மெத்தனால் கள்ளத்தனமாக விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வுழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
Post a Comment