ஆவா அருணிற்கு புதிய பதவி!ஆவா அருண் என்றழைக்கப்பட்டநபரொருவர் சுதந்திரக்கட்சிஇஜக்கிய தேசியக்கட்சியை தொடர்ந்து தற்போது புதிய கட்சி பதவி பெற்றுள்ளார்.

மௌபிம ஜனதா கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் யாழ்.மாவட்ட பிரதம அமைப்பாளராகவும் அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர இதற்கான நியமனத்தை வழங்கினார்.

 மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர, இலங்கையை முற்போக்கான நாடாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அருண் சித்தார்த் சிறந்த சேவையை ஆற்றுவார் என தெரிவித்தார்.

 குறிப்பாக அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற விடயத்தில் உரத்த குரல் எழுப்புவார் என தான் நம்புவதாகவும் திலித் ஜயவீர தெரிவித்தார்.


No comments