வியாழேந்திரன் மீண்டும் தாவினார்!



புதிய  அமைச்சு பதவியை ஏற்றுள்ள நிலையில் ரணிலை வெல்லவைக்கும் கூட்டிலும் இணைந்துள்ளார் வியாழேந்திரன்

  பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவின் ஏற்பாட்டில் "நாட்டை வெல்லுங்கள் - எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளில் வெல்லவாயவில் நடைபெற்ற மக்கள் பேரணியிலேயே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் புதிய கூட்டணியில் இணைந்துகொண்டார்.

அத்துடன் தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கரவும் இந்த கூட்டணியில் இணைந்து கொண்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து நடத்தும் பொதுக் கூட்டத் தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டமே இன்று (29) மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

நிமல் சிறிபால டி சில்வா மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன , துமிந்த திஸாநாயக்க , ஜகத் புஷ்பகுமார , அனுர பிரியதர்ஷன யாப்பா  நிமல் லான்சா , எஸ்.வியாழேந்திரன், ஜகத் பிரியங்கர  உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மேயர்கள், பிராந்திய சபை உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பினர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.  

No comments