தமிழீழம் நல்லது!



தமிழர்களுக்கு தனிநாடு அமைத்துக் கொடுக்கப்பட்ட வேண்டும் என மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள கருத்தானது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஏனென்றால் நாங்கள் இலங்கைக்குள் ஒரு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. சிங்கள, பௌத்த தலைமைகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருப்பதற்கான பதிலடி இறுதியிலே தமிழீழ தனியரசே என்றால் அதை எவராலும் தடுக்க முடியாது எனவும்; எம்.கே சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் தமிழர்களுக்கு தனிநாடு அமைத்துக் கொடுக்கப்பட்ட வேண்டும் என மதுரை ஆதீனம் மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர முன்வைத்துள்ள கோரிக்கை உண்மையிலே நல்லதொரு விடயம்.

இந்தியாவிற்கும்  பூகோள நலன்சார்ந்த அரசியலில் ஒரு தேவை உருவாகி வருகிறது. பொது வாக்கெடுப்பை நடத்தினால், தமிழர்களது எதிர்பார்ப்பை இலகுவில் அடையாளங்கண்டுகொள்ள முடியும். வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களும் அந்தந்த நாடுகளில் இதற்கு வாக்களித்தால், தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதும் சகலருக்கும் தெரியும்.

ஆகவே இன்று இலங்கையின் சிங்கள, பௌத்த தலைமைகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருப்பதற்கான பதிலடி இறுதியிலே தமிழீழம்தான் என்றால் அதை எவராலும் தடுக்க முடியாது“ எனவும் எம்.கே.சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார்.


No comments