214பேர் கைதென்கிறது இலங்கை கடற்படை!



நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதல் தற்போதைய காலம் வரை  இந்திய மீனவர்கள் 214 பேர் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

அத்துடன் வடக்கு கடற்பரப்பு மற்றும் கிழக்கு கடற் பரப்புகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தனர் என்றக் குற்றச்சாட்டில் 28 இந்திய மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 214 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை காங்கேசன்துறை பகுதிக்குள் அப்பால் கடலில், செவ்வாய்க்கிழமை (25) மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 10 இந்திய மீனவர்களை கடற் படையினர் கைது செய்துள்ளனர்.

அதேவேளை இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றுள்ளது .

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை அதிகாரியே  உயிரிழந்துள்ளார். 

நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில்,இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதை அவதானித்து , அவர்களை கைது செய்ய முயன்றபோது கடற்படையினர் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

அதனையடுத்து படகில் இருந்த 10 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர் காயமடைந்த கடற்படை அதிகாரியை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார் .



No comments