மதுவென நஞ்சு:நால்வர் பலி!



தென்னிலங்கையில் கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை குடித்த நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தங்காலையில் இருந்து 320 கடல்மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த மீன்பிடி படகொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தங்காலையில் இருந்து நேற்று மீன்பிடி நடவடிக்கைகளுக்காக குறித்த நீண்டநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments