முதலில் கருத்து கணிப்பே!



ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நாடளாவிய ரீதியில் தனது மக்கள் கருத்துக்  கணிப்பை  ஆரம்பித்துள்ளார் .அந்த நடவடிக்கைகளுக்காக புலனாய்வு துறை அதிகாரிகள் குழுவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இந்த மக்கள் கணிப்பு அனைத்தும் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் மக்கள்  கருத்துக் கணிப்பு  முடிவுகளை கவனமாக ஆராய்ந்த பின்னரே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை ரணில் விக்கிரமசிங்க தீர்மானிப்பார் எனத் தெரிய வருகிறது.


No comments