காணாமல் போன மீனவர்கள் பற்றி தகவலில்லை!
யாழ்ப்பாணத்தின் தீவகங்களில் ஒன்றான அனலைதீவில் இருந்து கடந்த திங்கட்கிழமை 10 ஆம் திகதி மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இரு மீனவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இரு குடும்பஸ்தர்களே இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனிடையே அவர்களை உறவினர்களும் , ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் இரண்டாம் நாளாக இன்றும் ஈடுபட்ட போதும் இதுவரை அவர்கள் கண்டறியப்படவில்லை.
நீண்ட விடுமுறையின் பின்னரான இந்திய மீனவர்கள் மீண்டும் கடலில் தொழிலுக்கு திழும்பியுள்ளனர்.
இந்நிலையில் உள்ளுர் மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்கள தகவல்கள் கிடைக்கப் பெற்றால் தகவல் தர கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment