மன்னாரில் விபத்து - பெண் உயிரிழப்பு ; 13 பேர் காயம்


மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில் 13 பேர் காயமடைந்துள்ளனர். 

கல்முனையில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் முருங்கன் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் வாகனத்தில் பயணித்த 14 பேரும் காயமடைந்த நிலையில் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் , அவர்களில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை 07 மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் 

வாகனத்தில் பயணித்த அனைவரும் உறவினர்கள் என தெரிவித்த போலீசார் , சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments