30 விழுக்காட்டால் மரணதண்டனைகள் அதிகரிப்பு


2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1,153 மரணதண்டனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என இன்று புதன்கிழமை மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 30 விழுக்காட்டால் மரண தண்டனைகள் அதிகரித்துள்ளது. 1,634 பேர் தூக்கிலிடப்பட்டதாக அறியப்பட்டது.  இது 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழங்கப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

2023 ஆம் ஆண்டு மரண தண்டனை வழங்கிய நாடுகளின் எண்ணிக்கை 16 நாடுகளாக இருந்தன. இது எண்ணிக்கையில் குறைவானது.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ​​ஈரானின் மரணதண்டனைகள்  அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. ஈரானிய அதிகாரிகள் கடந்த ஆண்டு குறைந்தது 853 பேரை தூக்கிலிட்டுள்ளனர். 2022ல் 576 பேர் துக்கிலிட்டுக் கொல்லப்பட்டனர்.

ஈரானிய அதிகாரிகள் மனித உயிர்களை முற்றிலும் அலட்சியப்படுத்தினர் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான மரணதண்டனைகளை அதிகரித்தனர்.

சவூதி அரேபியா, சோமாலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனைகளை நிறைவேற்றிய மற்ற நான்கு நாடுகளில் உள்ளன.

அமெரிக்காவில், மரணதண்டனைகள் 18 முதல் 24 வரை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உயர்ந்தன. இந்த மரண தண்டனைகள் அனைத்து விச ஊசி மூலம் நிறைவேற்றப்பட்டன.

உண்மையான மரணதண்டனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை குறிப்பிடுகிறது. 

சீனா போன்ற நாடுகளில் கணக்கீடுகளில் சேர்க்கப்படதா வெளியே தொியாமல் இரகசியமாக வழங்கப்படும் மரண தண்டனைகள் இது குறிப்பிட்டுள்ளது.

மரண தண்டனை குறித்த புள்ளிவிவரங்கள் எதையும் சீனா இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் தூக்கிலிடப்படுகிறார்கள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படுகிறார்கள் என்று கிடைக்கக்கூடிய தகவல்கள் குறிப்பிடுகின்றன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று பெலாரஸ் மற்றும் வடகொரியாவில் அரசால் கட்டுக்குள் வைத்திருப்பதால் எந்தவொரு தகவலும் வெளியுலகத்திற்கு தெரிய வரவில்லை என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments