தென்கொரியா மீது பலூன்கள் மூலம் குப்பைகளை வீசியது வடகொரியா


வடகொரியா பலூன் மூலம் குப்பைகளை வடகொரியாவுக்கு அனுப்பி வைத்தது.

இன்று புதன்கிழமை பிற்பகல் வரை 150க்கு மேற்பட்ட பலூன்கள் தென்கொரியா எல்லையின் வந்து வீழ்ந்துள்ளன என தென்கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்தார்.

அஞ்சமடைந்த தென்கொரியா வெடிகொண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தபோது அது குப்பைகள் எனத் தெரியவந்துள்ளது.

இச்செயல் அடிபடையில்  ஆபத்தானது என தென்கொரியா அறிவித்தது.

வடகொரியாவின் அதன் மனிதாபிமானமற்ற மற்றும் கீழ்த்தரமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம் என்று சியோலின் கூட்டுப் படைத் தலைவர் கூறினார்.

வடகொரியாவிலிருந்து இருந்து அனுப்பப்படும் பலூனில் வரும் பொருட்களைத் தொடவேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாறான பொருட்களைக் கண்டால் இராணுவத்திற்கோ அல்லது  காவல்துறையினருக்கோ அழைத்து விடுக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டில் இதேபோன்ற வட கொரிய பலூன் அனுப்பிய நடவடிக்கையால் கார்கள் மற்றும் பிற சொத்துக்கள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments