எலும்புத் துண்டு பொறுக்கும் தமிழ் அரசியல்வாதிகள்?
தமிழ் நாடாளுமன்ற உறுப்பனர்கள் சுகபோகமாக வாழ்வதற்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்கின்றனர். யுத்தத்தின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளின் கதி என்னவென்பதை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் தாய்மார்கள் ஒன்றரை தசாப்தங்களாக நடத்தும் போராட்டத்தைப் பொருட்படுத்தாதவர்களாகவே தமிழ் அரசியல்வாதிகள உள்ளனர்.அவர்களே வடக்கில், தற்போதைய ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்து வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் 2009ஆம் ஆண்டு தொடக்கம் வீதியில் திரியும் தெரு நாய்களைப் போல் தமது உறவுகள் எங்கே எனக் கேட்டு அலைந்துகொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையில் கொலைகளை செய்தவர்களுக்கு அவர்களுக்கு துணை போகின்றவர்களாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.அவர்கள் ஜனாதிபதியின் அடுத்த தேர்தலுக்காக தனது கபட நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.
மக்கள் ஆணையில்லாமல் பதவிக்கு ஜனாதிபதி மக்கள் ஆணையை பெறுவதற்காகவே அவ்வாறு செயற்படுகின்றார். அதற்கு எமது அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் துணை போகின்றார்கள்.”
இதனிடையே வடக்கிற்கு மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி வவுனியா மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது, செயலகத்திற்கு முன்பாக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் குதித்திருந்தன.
அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் அரசியல்வாதிகளை 'அரசாங்கம் வீசும் எலும்புத் துண்டுகளை எடுப்பவர்கள் எனவும் காட்டமான குற்றச்சாட்டுக்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment