பிற்போடுவதா?-கொதிக்கும் கொழும்பு !



ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சி தென்னிலங்கையில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற கூற்றுகள் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஜனநாயக ஆட்சியில் சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும். பொறுப்பற்ற வகையில் தெரிவிக்கப்படும் கருத்துகள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடப்படாத விடங்களை முன்வைத்து, நாட்டில் குழப்பமான நிலையை தோற்றுவிக்கின்றமையானது, ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல எனவும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதில் வென்று ஜனாதிபதியாகப் போவதாகவும் சொல்லும் எந்நவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக இதுவரை அறிவிக்கவில்லை. அதனால் நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



No comments