வாக்கு பிச்சை முகவர்களாக ஆசிரியர்கள்?


வடகிழக்கில் தமிழ் வாக்குகளை அறுவடை செய்ய ஜேவிபி படாதபாடு பட்டுவரும் நிலையில் ஆசிரியர்களை மையப்படுத்தி தனது அரசியலை நகர்த்த தொடங்கியுள்ளது.

அவ்வகையில் பாடசாலை அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு, எதிர்வரும் ஜூன் மாதம்; 12 ஆம் திகதி, நாடு முழுவதும் உள்ள 101 கல்வி வலயங்களிலும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.அத்துடன், 26 ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தமது போராட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஜேவிபி சார்பு அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று மாலை யாழ்ப்பாணத்தில் நடாத்தியிருந்தது.

ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்க யாழ்ப்பாண பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டிருந்தனர்.

தமிழர்களது விடுதலைப்போராட்டத்தை தோற்கடிக்க ஜேவிபியே முக்கிய பங்காற்றியதாக கட்சி முக்கியஸ்தர் லால்காந்த முன்னாள் இராணுவத்தினர் மத்தியில் ஆற்றிய உரை தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளமை தெரிந்ததே.



No comments