அமெரிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் விமாத்தைத் தொடர்ச்சியாகச் சுட்டு வீழ்த்தும் ஹூதி போராளிகள்

அமெரிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் (MQ-9 Reaper ) வேவு பார்க்கும் விமானத்தை ஹூதி போராளிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

யேமனின் மத்திய மாகாணமான அல் பைடாவின் மாரிப்பில் பகுதியில் இந்த வேவு விமானம் நேற்றுப் புதன்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டது.

அத்துடன் சுட்டு வீழ்த்திய முழுமையாக காணப்படும் ஆளில்லா விமானத்தையும், அந்த விமானத்தின் மேல் ஹூதி போராளிகள் ஏறி நின்று உரையாடும் காட்சியும் காணொளியில் வெளியாகியுள்ளனர்.

மற்றொரு காணாெளியில்  ஹூதி போராளிகள் விமான எதிர்ப்பு  ஆயுத வாகனத்துடன் எம்.கியூ-9 ரீப்பர் அருகே நிற்றும் காட்டியும் வெளியாகியுள்ளன.

ஹூதி போராளிகளால் இதுவரை ஐந்து எம்.கியூ-9 ரீப்பர் வேவு விமானத்தைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஈராக்கில் ஈரானிய ஆதரவு குழுவான ஈராக் றெசிடன் அமைப்பினால் இரண்டு எம்.கியூ-9 ரீப்பர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. முதல் முதலில் கருங்கடலில் ரஷ்யப் போர் விமானம் அதன் எரிபொருளை வானில் ஊற்றி  எம்.கியூ-9 ரீப்பர் விமாத்தை கடலில் வீழ்த்தியிருந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.

எம்.கியூ-9 ரீப்பர் வேவு விமானத்தை ஏமனில் உள்ள ஹூதி போராளிகள் தொடர்ச்சியாகச் சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.

அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளுடன் கூடிய இந்த வேவு விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடமாக உள்ளது.

இந்த வேவு விமானத்தின் பெறுமதி 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இ்வ்விமானம் 48 மணி நேரம் வானில் பறந்து வேவுத் தகவல்களைச் சேகரித்து சம நேரத்தில் தாக்குதல்களை நடத்தக்கூடியது.

50 ஆயிரம் அடி உயரத்தில் 1850 கிலோ மீற்றர் தொலைதூரம் வரை பறப்பை மேற்கொள்ளக்கூடியது. இது 482 km/h வேகத்தில் பறக்கக்கூடியது. இதன் நிறை  2,223 கிலோ கிராம் எடை கொண்டது. 11 மீற்றர் நீளம் கொண்டது. அதன் இறக்கைகள் 20 மீ (66 அடி) நீளம் கொண்டவை.




No comments