ஈரானிய அதிபர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்து? தொடரும் தேடுதல் நடவடிக்கை!!
ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் அஜபச்சானிலிருந்து உலங்கு வானூர்தியில் ஈரானுக்குத் திரும்பும் போது மோசமான வானிலை காரணமாக மலைப் பகுதியில் தரையிறங்கிருக்கலாம் அல்லது விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அவர்களுடனான தொடர் முற்று முழுதாகj; துண்டிக்கப்பட்டது.
ஈரானின் வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் இரவு வரை மீட்புக் குழுக்கள் உலங்கு வானூர்தியைக் கண்டுபிடிக்கவில்லை.
ஜோல்ஃபா ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் (375 மைல்) தொலைவில் அஜர்பைஜான் எல்லையில் அமைந்துள்ளது.
ஈரானிய அதிபர் பயணித்த உலங்கு வனூர்தியுடன் பணித்த மற்றைய இரண்டு உலங்கு வானூர்திகளும் இலங்கை வந்தடைந்தன.
ஈரானின் வடக்குப் பகுதியில் அமைந்து மலைத் தொடலில் மோசமான வானிலை மற்றும் மூடுபனி காரணமாக உலங்குவானூதியைக் கண்டுபிடிக்க முடியில்லை.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை கடினப்பட்டுத் தரையிறங்கியதுஎன்று ஈரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிடி கூறினார்.
குறித்த உலங்கு வானூர்தியில் ஈரானிய அதிபர் ரைசியுடன், வெளியறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் கவர்னர் மலேக் ரஹ்மதி மற்றும் பல பயணிகள் இருந்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்புக் குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. மோசமான பனிமூட்டம் காரணமாக மலைப்பகுதிக்கு எவரும் செல்ல முடியாத நிலைய ஏற்பட்டுள்ளது.
ஈரானிய அதிபர் ரைசி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எல்லை நாடான அஜர்பைஜானில் அந்நாட்டின் அபதிர் இல்ஹாம் அலியேவுடன் ஒரு அணையைத் திறந்து வைத்தார். அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய மூன்றாவது அணையாகும்.
தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஈரானுக்கு மீட்புக் குழுவை அனுப்புவதாக ரஷ்யா திங்கள்கிழமை கூறியது.
ஈரானிய தரப்பின் வேண்டுகோளின் பேரில், ரஷ்ய அவசரகால அமைச்சின் மீட்பாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவுவார்கள்" என்று ஒரு அறிக்கை கூறுகிறது. குழு வடமேற்கு நகரமான தப்ரிஸுக்குச் செல்லும் என்று அது மேலும் கூறியது.
ஈராக், துருக்கி, சவூதி அரேபியா கவலைகளை தெரிவித்துடன் ஆதரவை வழங்குகின்றன.
தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளில் அண்டை நாடான ஈரானுக்கு ஈராக் உதவியது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு அனைத்து வகையான ஆதரவையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவும் ஈரானுக்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், தேவையான எந்த உதவியையும் வழங்க தயாராக இருப்பதாக கூறியது.
Post a Comment