இஸ்ரேல் தலைவர்கள் மற்றும் ஹமாஸ் தலைவர்களைக் கைது செய்யக் கோரிக்கை!!


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணியான கரீம் கான் இஸ்ரேலியப் பிரதமர் பென்சமின் நெதன்யாகு, இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருடன் ஹமாஸ் அமைப்பின் தலைர்களையும் கைது செய்யக் கோரியுள்ளார் என இன்று திங்கட்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் தலைவர்களான இஸ்மாயில் ஹனியே மற்றும் யஹ்யா சின்வார் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் காசாவில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இவர்களைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments