ஏதிலிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 35 பாலஸ்தீனியர்கள் பலி!!


தெற்கு காஸா நகரமான ரஃபாவில் இடம்பெயர்ந்து வாழும் பாலஸ்தீனிய மக்களின் ஏதிலிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 35 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அல்-சுல்தான் பகுதியில் நடந்த தாக்குதலில் பெரும் தீப்பிழம்புகளுடன் தீ எரிவதை காணொளிகள் காட்டின.

இரண்டு மூத்த ஹமாஸ் அதிகாரிகளைக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்தன. 

ஆனால் இதில் பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் போராளிகள் எவரும் கொல்லப்படவில்லை என ஹமாஸ் தரப்பினர் அறிவிதனர்.

இதனையடுத்து பொதுமக்களுக்கு ஏற்பட்டஇழப்புக்கள் குறித்து மதிப்பாய்வு செய்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் சில மணி நேரங்களுக்கு முன்னர் ஹமாஸ் போராளிகள் அங்கிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி எட்டு ரொக்கட் தாக்குதலை நடத்தியிருந்தனர். 

ரஃபாவின் மையப் பகுதியிலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் வடமேற்கில் உள்ள தல் அல்-சுல்தானில் ஐ.நா வளாகத்திற்கு அருகே இடம்பெயர்ந்த மக்களுக்கான கூடாரங்களை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

தல் அல்-சுல்தானில் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக ஐடிஎஃப் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் கூறியது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயுதக் குழுவின் போராளிகளின் தலைமை அதிகாரி யாசின் ராபியா மற்றும் மற்றொரு கலீத் நகர் ஆகிய இரண்டு ஹமாஸ் தலைவர்களை கொன்றதாக இஸ்ரேல் அறிவித்தது.

இஸ்ரேலின் பாதுகாப்பு படைகளின்இன் அட்வகேட் ஜெனரல் ரஃபாவில் நடந்த சம்பவத்தை மிகவும் கடினமானது என்று இன்று திங்கட்கிழமை ஒரு உரையில் விவரித்தார். மேலும் போரின் போது சம்பந்தப்படாத குடிமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு வருந்துகிறேன் என்று கூறினார்.


No comments